Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பங்சார் துப்பாக்கிச் சூடு: கும்பல் பகை காரணமென போலீஸ் தகவல்
தற்போதைய செய்திகள்

பங்சார் துப்பாக்கிச் சூடு: கும்பல் பகை காரணமென போலீஸ் தகவல்

Share:

கோலாலம்பூர், பங்சாரில் உள்ள ஜாலான் தெலாவியில் கடந்த புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், இடத்தை கைப்பற்றுவதில் இரு கும்பல்களுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டியால் ஏற்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேளிக்கை மையத்திற்கு வெளியே ஏற்பட்ட மோதலில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக 27 மற்றும் 33 வயதுடைய இரு சந்தேக நபர்களைக் கிள்ளானில் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் போலி கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மர்சூஸ் தெரிவித்தார்,

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கு 17 குற்றப் பின்னணிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு முழுமையாகத் தீர்க்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது."

Related News