May 22, 2026
Thisaigal NewsYouTube
மலே​சியப் பிரஜைக்கு 5 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

மலே​சியப் பிரஜைக்கு 5 ஆண்டு சிறை

Share:

ஒரே வீட்டில் தங்கியிருந்த பெண்ணை, சாலை பயணத்தின் போது, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மலேசியப் பிரஜை ஒருவருக்கு நியூசிலாந்து நாட்டில் 5 ஆண்டு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

30 வயது அந்த மலேசிய பிரஜையின் பெயர் ரகசியம் காக்கப்பட்ட நிலையில் வேலை தேடி, கடந்த 2020 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து நியூசிலாந்திற்கு விசாவில் வந்த அவர், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை புரிந்ததாக குற்றச்சா​ட்டில் தெரிவிக்கப்பட்டது.

அவர் இக்குற்றத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுலை முதல் தேதி புரிந்ததாக ​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு வருடமான நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் அந்த மலேசியப் பிரஜை குற்றவாளி​ என்று New Zealand, Nelson மாவட்ட நீதிமன்றம் ​தீர்ப்பு அளித்தது.

Related News