Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மாணவி வினோசினி மரணம்: யுயுஎம் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தந்தையின் வழக்கு தள்ளுபடி
தற்போதைய செய்திகள்

மாணவி வினோசினி மரணம்: யுயுஎம் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தந்தையின் வழக்கு தள்ளுபடி

Share:

அலோர் ஸ்டார், ஏப்ரல்.26-

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு யுயுஎம் எனப்படும் வட மலேசியப் பல்கலைக்கழக விடுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் மாணவி எஸ். வினோசினியின் தந்தை, பல்கலைக்கழகத்திற்கு எதிராகத் தொடர்ந்த 3 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரும் வழக்கை அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மாணவியின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என்பதையும், பல்கலைக்கழகத்தின் கவனக்குறைவு இதில் உள்ளது என்பதையும் வாதி ஆர். சிவகுமார் நிரூபிக்கத் தவறி விட்டதாக நீதிபதி Dr John Lee Kien How @ Mohammad Johan Lee தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எரிசக்தி ஆணையம் நடத்திய ஆய்வில் விடுதியின் மின்சாரக் கட்டமைப்பும், தொடர்புடைய சாதனங்களும் சரியாகச் செயல்பட்டது உறுதியானதைக் குறிப்பிட்ட நீதிபதி, புகார்தாரருக்கு 5,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட்டார்.

கணக்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவியான வினோசினி, கடந்த 2022-ஆம் ஆண்டு மே 21 அன்று தனது விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு நீதி கேட்டுத் தொடரப்பட்ட இந்த வழக்கு பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றிருந்தது. நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்துத் தாங்கள் விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகப் புகார்தாரரின் வழக்கறிஞர் எம். மனோகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை