பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ள இருக்கும் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினரையும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றம் என்பது பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அமைச்சரவையில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. இந்த மாற்றத்தை செய்வதற்கு பிரதமர் மீது முழு நம்பிக்கை கொள்ளுமாறு ஸாஹிட் வலியுறுத்தியுள்ளார்.








