அலோர் செட்டர் ,செப்டம்பர் 17-
பலத்த காற்று, கனத்த மழையில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக் கொண்டு சாய்ந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், பலத்த காயங்களுக்கு ஆளானார்.
இச்சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் கெடா- அலோர் செட்டர், ஜாலான் அலோர் செட்டர், -கங்கர் சாலையில் நிகழ்ந்தது . இதில் மோட்டார் சைக்கிளோட்டியுடன் உடன் வந்த காரொட்டி ஒருவரும் காயம் அடைந்ததாக தீயணைப்பு , மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
காயம் அடைந்த மோட்டார் சைக்கிளோட்டியையும் , கார் ஒட்டுநரையும் மீட்கும் நடவடிகை மாலை 6.51 மணியளவில் முற்றுப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.








