Aug 11, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூருக்கு 18 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுப் பயணிகள் வருகை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூருக்கு 18 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுப் பயணிகள் வருகை

Share:

ஷா ஆலாம், ஏப்ரல்.21-

இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதலாவது காலாண்டில், 18 லட்சத்து 40 ஆயிரம் சுற்றுப் பயணிகளை சிலாங்கூர் ஈர்ததுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 3.6 விழுக்காடு அதிகமாகும்.

இந்த வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கையில், 2025 சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் இயக்கத்தின் வாயிலாக எண்பது லட்சம் வருகையாளர்களை ஈர்க்கும் இலக்கை அடைய முடியும் என்று தாங்கள் நம்புவதாக ஊராட்சித்துறை மற்றும் சுற்றுலா துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சூ லிம் கூறினார்.

தாங்கள் 70 விழுக்காட்டு உள்நாட்டுச் சுற்றுப் பயணிகளையும் 30 விழுக்காட்டு வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளையும் ஈர்க்க இலக்கு கொண்டுள்ளதாகவும், இந்த வருகையின் மூலம் 1,100 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்ட முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

சுற்றுப் பயணிகளின் வருகை உள்ளூர் பொருளாதாரத்திற்கு, குறிப்பாக சிறு வணிகர்களுக்குக் கணிசமாகப் பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு