Sep 6, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது
தற்போதைய செய்திகள்

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

Share:

கூலிம் தாமான் கெமுனிங்-ல் நிறுத்தப்பட்டிருந்த பெருடுவா மைவி காரை கத்தியால் குத்தி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் 33 வயது பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்க கண்ணாடி மற்றும் பின்புற விளக்குகளை, காய்கறி வெட்டும் கத்திகளைக் கொண்டு அப்பெண் சேதப்படுத்தியதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த கூலிம் மாவட்ட போலீசார், அப்பெண்ணைக் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் அதே பகுதியில் வசிப்பவர் என்றும், 2012-ஆம் ஆண்டு முதல் கூலிம் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன், கடந்த ஜூன் மாதம் இறுதியாக சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைக்காக போலீசாரின் உதவியுடன் கூலிம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 427-ன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சம்சூல் பின் சின்ரிங் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து