Sep 7, 2026
Thisaigal NewsYouTube
சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது
தற்போதைய செய்திகள்

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

Share:

சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் 4.033 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்றதாக மலேசியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து சென்னை வந்து, சந்தேகத்திற்கிடமான வகையில் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது, விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

எக்ஸ்-ரே சோதனையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், பயணப் பொதியின் அடிப்பகுதியில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மறைவிடத்தில் நான்கு பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பரிசோதனையில் அவை ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது உறுதி செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இந்தியாவின் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் 1985 பிரிவு 43(a)-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து