Jul 31, 2026
Thisaigal NewsYouTube
27 முறை கத்திக் குத்து !
தற்போதைய செய்திகள்

27 முறை கத்திக் குத்து !

Share:

27 தடவை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த உணவு வியாபாரியின் நெருங்கிய நண்பர்கள் மூவர் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பினாங்கு, தீமூர் லாவுட் மாவட்டக் காவல் துறையின் இடைக்காலத் தலைவர் வீ சரவணன் தெரிவித்தார்.

பினாங்கு, ஜெலுத்தோங்கில் நேற்று இரவு 7.30 மணிக்கு 29 வயதுக்கும் 42 வயதுக்கும் உட்பட்ட இரு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் சொன்னார்.

60 வயதுக்கும் மேற்பட்ட அந்த உணவு வியாபாரி, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் போது உயிரிழந்தார்.

Related News