குளுவாங், ஜூலை.21-
ஃபோர் வீல் டிரைவ் வாகனம் ஒன்று, பாதையை விட்டு விலகி, பாதாளத்தில் விழுந்ததில் ஒருவர் மரணமுற்றார். மற்றொருவர் படுகாயத்திற்கு ஆளாகினார்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.35 மணியளவில் ஜோகூர், ஜாலான் யொங் பெங்-குளுவாங் சாலையின் 56 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இதில் 53 வயதுடைய ஒங் யொங் ஷெங் என்பவர் உயிரிழந்தார். 53 வயதுடைய மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.








