கோலாலம்பூர், நவம்பர்.28-
கடந்த மூன்று நாட்களாக நாட்டையே உலுக்கிய வெப்பமண்டல சென்யார் புயல் கடந்து விட்டது. அந்தப் புயல் நாட்டில் தற்போது இல்லை என்று மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
தென்சீனக் கடலிருந்து நகர்ந்து வலுவடைந்த நிலையில், மலாக்கா நீரிணையில் மையம் கொண்டு இருந்த சென்யார் புயல், நேற்று நள்ளிரவு தீபகற்ப மலேசியாவில் மையப் பகுதியில் ஊடுருவி கடந்த விட்டது. அந்தப் புயல் தற்போது மலேசியாவில் இல்லை என்ற போதிலும் புதிய வானிலை அடிப்படையில் மழை தொடர்ந்து பெய்து வருவதாக இன்று மாலையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஹிஷாம் அனிப் தெரிவித்தார்.








