Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

Share:

ஈப்போவில் கடை ஒன்றில் பணியாற்றிய 19 வயது பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, 23 வயதான முஹ்மட் ஹாஸிஃக் டானியல் ஸுல்கிஃப்லி இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

ஒரு குழந்தையின் தந்தையான அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு விசாரணை கோரினார்.

முதல் குற்றச்சாட்டில், பெண்ணை பின்னால் இருந்து கட்டிப் பிடித்து, அவரது மார்பகங்களைப் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது குற்றச்சாட்டில், அதே பெண்ணின் முன்னிலையில் ஆபாசமான செயலில் ஈடுபட்டு, அவரது கண்ணியத்தைப் பாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அதிகாலை 5.25 மணியளவில், பனோராமா லப்பாங்கான் பெர்டானா, கிந்தா பகுதியில் உள்ள கடையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 4,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Related News