Sep 15, 2026
Thisaigal NewsYouTube
திரெங்கானுவில் யானை மீது கார் மோதி விபத்து - 3 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

திரெங்கானுவில் யானை மீது கார் மோதி விபத்து - 3 பேர் காயம்

Share:

திரெங்கானு மாநிலம், ஜாபோர் தோட்டப்புறம் அருகே ஜாலான் ஜெராங்காவ்-ஜாபோர் சாலையின்160-வது கிலோமீட்டரில் நேற்று இரவு 7.58 மணியளவில், சாலையைக் கடந்த யானை மீது கார் மோதி விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் பின்னால் வந்த மற்றொரு காரும் மோதியதில் இரண்டு கார்களில் இருந்த 3 பேர் லேசான காயமடைந்தனர்.

முதல் காரை ஓட்டிச் சென்ற 29 வயதான அமிருல் அஃபிக் ஆஸ்மி கையில் காயமடைந்த நிலையில், அவரது மனைவி ஃபர்ஹாயின் ஜோலியுஸ் கால் மற்றும் மார்பில் காயமடைந்தார்.

இந்நிலையில், பின்னால் வந்த காரை ஓட்டிச் சென்ற வான் முஹமட் ஃபையிஸ் ஃபக்ருல்லா வான் முஹமட் ஸைனால் முழங்காலில் லேசான காயமடைந்தார்.

மூவரும் கெமாமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விபத்து தொடர்பான வாகனக் கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

ஈப்போவில் பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – இளைஞர் மீது 2 குற்றச்சாட்டுகள்

புகாரி இகுய்டி வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து முகைதீன் யாசின் விடுதலை

புகாரி இகுய்டி வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து முகைதீன் யாசின் விடுதலை

பீப்பாயில் மனித உடல் பாகங்கள்: அடையாளம் காணும் பணியில் போலீஸ் தீவிரம்

பீப்பாயில் மனித உடல் பாகங்கள்: அடையாளம் காணும் பணியில் போலீஸ் தீவிரம்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரம்: மந்திரி பெசார் அளித்துள்ள இரு புகார்களின் அடிப்படையில் விசாரணை

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரம்: மந்திரி பெசார் அளித்துள்ள இரு புகார்களின் அடிப்படையில் விசாரணை

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம்! புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலம்! புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்