Oct 11, 2026
Thisaigal NewsYouTube

பிபிஆர் அடுக்குமாடி வீட்டில் தீ: 4 வயது சிறுவன் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிபிஆர் அடுக்குமாடி வீட்டில் தீ: 4 வயது சிறுவன் மரணம்

மலாக்கா, மே.16-

பிபிஆர் அடுக்கு மாடி வீடமைப்புப் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மலாக்கா, கிருபோங்கில் உள்ள பிபிஆர் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து, செங் மற்றும் ஆயர் கெரோ ஆகிய நிலையங்களிலிருந்து விரைந்த 17 தீயணைப்பு வீரர்கள், தீயை முற்றாக அணைத்ததுடன், தீ மற்ற வீடுகளில் பரவுவதைக் கட்டுப்படுத்தினர்.

20 க்கும், 40 க்கும் உட்பட்ட சதுரடி பரப்பளவைக் கொண்ட அந்த வீடு 50 விழுக்காடு சேதமுற்றது. தீயின் ஜுவாலைக்கு மத்தியில் தப்பிக்க இயலாமல் சிக்கிக் கொண்ட சிறுவன் உயிரிழந்ததாக தீயணைப்புப் படையின் செயலாக்க கமாண்டர் முகமட் லொக்மான் கானி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →