டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்தி கட்சிக்கு செனட்டர் பதவி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனலின் விசுவாசமிக்க தோழமைக் கட்சியான மக்கள் சக்திக்கு செனட்டர் பதவி ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று அக்கட்சி சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மக்கள் சக்தி கட்சியின் 15 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையல் துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் மக்கள் சக்தி தலைவர் டத்தோ தனேந்திரன், பாரிசான் நேஷனல் சார்பில் பினாங்கு, நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதையும் அகமட் ஜாஹிட் நினைவுகூர்ந்தார்.








