Jul 10, 2026
Thisaigal NewsYouTube
தாயா கெர் ஜெயா 2.0 திட்டத்தில் 9 மில்லியன்  ரிங்கிட் மோசடி: 73 பேர் எஸ்பிஆர்எம்- ஆல் கைது
தற்போதைய செய்திகள்

தாயா கெர் ஜெயா 2.0 திட்டத்தில் 9 மில்லியன் ரிங்கிட் மோசடி: 73 பேர் எஸ்பிஆர்எம்- ஆல் கைது

Share:

அரசாங்கத்தின் 'தாயா கெர் ஜெயா 2.0' ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், சுமார் 9 மில்லியன் ரிங்கிட் போலி கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாக 73 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 48 ஆண்களும் 25 பெண்களும் அடங்குவர். இவர்கள் முகவர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் என எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாண்டு மற்றும் கடந்த 2024, 2025-ஆம் ஆண்டுகளில் இந்த மோசடிகள் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாடு தழுவிய அளவில் 90 நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையை அடுத்து, 25 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதன் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்