Jun 11, 2026
Thisaigal NewsYouTube
மதமாற்றச் சட்டத்திற்கு எதிரான இந்திரா காந்தியின் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

மதமாற்றச் சட்டத்திற்கு எதிரான இந்திரா காந்தியின் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Share:

ஒருதலைப்பட்ச மதமாற்றச் சட்டங்களின் செல்லுபடித்தன்மையை எதிர்த்து பாலர் பள்ளி முன்னாள் ஆசிரியை எம். இந்திரா காந்தி உட்பட 14 பேர் தாக்கல் செய்த வழக்கில், கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.

ஜோகூர், பெர்லிஸ், மலாக்கா, கெடா, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் கூட்டரசு பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஒருதலைப்பட்ச மதமாற்றச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த 2023 மார்ச்சில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

ஆன்லைன் மூலமாக நாளை மதியம் 3 மணிக்கு நீதிபதி டத்தோ அலிசா சுலைமான் இந்தத் தீர்ப்பை வழங்குகிறார். இந்த நிலையில், இஸ்லாமிய நிர்வாகச் சட்டப்பிரிவுகள் தற்காக்கப்பட வேண்டும் என கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய மன்றத்தின் வழக்கறிஞர் டத்தோ ஜைனுல் ரிஜால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News