Jun 11, 2026
Thisaigal NewsYouTube
பேராக் பள்ளியில் முடி திருத்த விவகாரத்தால் மோதல்: கல்வித்துறை விளக்கம்
தற்போதைய செய்திகள்

பேராக் பள்ளியில் முடி திருத்த விவகாரத்தால் மோதல்: கல்வித்துறை விளக்கம்

Share:

கோலாகங்சாரில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் மாணவர் கட்டொழுங்கு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு தலைமுடி பரிசோதனையின் போது நடந்த தூண்டுதலே காரணம் என பேராக் மாநில கல்வித்துறை விளக்கியுள்ளது.

பள்ளியின் பல்நோக்கு அரங்கில் நேற்று காலை கட்டொழுங்கு சோதனையின் போது, விதிகளுக்குப் புறம்பாக தலைமுடி வைத்திருந்த மூன்று மாணவர்கள் ஆசிரியரின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் அவமரியாதையாகப் பேசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஒரு மாணவரிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். மற்ற இரு மாணவர்கள் கூச்சலிட்டபடி பள்ளியை விட்டு ஓடினர். ஆசிரியர் தாக்கப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு மத்தியில், கல்வித்துறை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் இணைந்து இப்பிரச்சினையை சுமுகமாக தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று பேரா மாநில கல்வி, உயர்கல்வி, இளைஞர், விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ கைருடின் அபு ஹனிபா விளக்கம் அளித்துள்ளார்.

Related News