கோத்தா கினபாலு, ஜூலை.26-
சபா மாநிலத்தின் தாவாவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, Apas Balung 1 மற்றும் Apas Balung 2 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதால், 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சபா மாநில துணை முதலமைச்சர் Dr Joachim Gunsalam கூறுகையில், வெள்ள நீர் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முழுமையாக மூழ்கடித்ததால், அங்குள்ள முக்கிய இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் சேதமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், Utara மற்றும் Cinta Mata நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








