கோலாலம்பூர், ஜூலை.26-
மலேசியக் குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது என்று பாஸ் தகவல் தொடர்புத் தலைவர் அஹ்மாட் ஃபாட்லி ஷாரி தெரிவித்துள்ளார்.
ஜசெக தலைவர்கள் முன்வைக்கும் "Anak Malaysia" என்ற கருத்தானது, தேசியக் கல்வி முறை, தேசிய மொழி மற்றும் மலேசியாவின் வரலாறு ஆகியவற்றுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளையில், நாட்டின் அடிப்படை கொள்கைகள், தேசியக் கல்வி முறை மற்றும் அதிகாரப்பூர்வ மொழியைப் புரிந்துகொண்டு மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








