Jul 10, 2026
Thisaigal NewsYouTube
நாயை அடித்த இருவருக்கு தலா 30,000 ரிங்கிட் அபராதம்; பினாங்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

நாயை அடித்த இருவருக்கு தலா 30,000 ரிங்கிட் அபராதம்; பினாங்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Share:

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாய் ஒன்றை கொடூரமாக அடித்த இரு நபர்களின் குற்றச்சாட்டுகளை பினாங்கு உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையை தலா 50 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 30 ஆயிரம் ரிங்கிட்டாக குறைத்து நீதிபதி சூங் இயோ சோய் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி பினாங்கு பத்து பத்து மாவூங்கில் உள்ள கம்பங் தெலுக் தெம்போயாக்கில் நாய் ஒன்றை அடித்ததாக 56 வயது ரோஸ்லி மாட் , 52 வயது சுஹைலி ஹரோன் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2015 ஆம் ஆண்டு விலங்கு நலச் சட்டத்தின் கீழ் இவர்களின் குற்றம் வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நீதிபதி உத்தரவிட்டார்.

விலங்குகளைத் துன்புறுத்துபவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.

Related News

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

அனைத்து மாநிலங்களிலும் ட்ரோன் பிரிவுகள்: குடிநுழைவுத் துறை அதிரடி திட்டம்!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்