Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வாகனத்தின் டயர் வெடித்தது, மாது மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வாகனத்தின் டயர் வெடித்தது, மாது மரணம்

மலாக்கா, ஜூன்.27-

எம்பிவி வாகனம் ஒன்றின் டயர் வெடித்து, சாலையை விட்டு விலகி, இரும்புத் தடுப்பில் மோதியதில் மாது ஒருவர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 189.1 ஆவது கிலோமீட்டரில் மலாக்கா அருகில் நிகழ்ந்தது.

இதில் சிறார் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் இதர மூவர் சொற்பக் காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த டொயோட்டா வெல்ஃபியர் வாகனம் ஆயர் குரோவிலிருந்து ஜாசினை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →