Oct 9, 2026
Thisaigal NewsYouTube

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: விசாரணை தொடர்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: விசாரணை தொடர்கிறது

கிள்ளான், ஜூன்.25-

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கிள்ளான், மேரு, தாமான் மேரு உத்தாமாவில் 46 வயது ஆடவர் ஒருவர், காரில் பயணம் செய்து கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எஸ். விஜயராவ் தெரிவித்தார்.

தலையில் சரமாரியாகப் பாய்ந்த துப்பாக்கி குண்டுகளினால் அந்த நபர் உயிரிழந்து இருப்பது சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 11 தனிநபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கானக் காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டு இருப்பதையும் விஜயராவ் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →