Oct 11, 2026
Thisaigal NewsYouTube

இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் காயாக் படகுப் பயணத்தைத் தொடக்கினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆடவர் காயாக் படகுப் பயணத்தைத் தொடக்கினார்

கோலாலம்பூர், மே.25-

லிம்ஃபோமா ஹாட்கின் எனப்படும் மூன்றாம் கட்ட இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 36 வயது முகமட் ஸாக்கி யமானி அஸ்மான், சுங்கை பஹாங்கில் 550 கிலோமீட்டர் தூரம் தனி ஆளாக காயாக் படகு பயணத்தை நேற்று தொடங்கினார். "ஸாக்கி பிஜாக்'" என்று அன்புடன் அழைக்கப்படும் இவர், சுங்கை ஜெலாய் நதியில் தனது பயணத்தைத் தொடங்கி, மே 31 ஆம் தேதிக்குள் பெக்கானை அடைய ஒன்பது நாட்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார். 2014 இல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸாக்கி, பல ஆண்டுகளுக்கு முன் முழுமையாக குணமடைவதற்கு முன் இருமுறை அந்நோயால் மீண்டும் பாதிக்கப்பட்டார்.

முன்னதாக, இவர் " ஒரு ரிங்கிட்டுடன் போர்னியோ சுற்றுப்பயணத்தையும், 13 ரிங்கிட்டுடன் 13 நாள் தீபகற்ப மலேசிய சுற்றுப்பயணத்தையும், வெறும் 60 காசுடன் கினபாலு மலை சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது அவர் தொடங்கியுள்ள இந்தக் காயாக் சாகசம், புற்றுநோயாளிகளுக்கு உத்வேகமளிப்பதையும், வாழ்க்கை மீதான நம்பிக்கையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என நம்பிக்கை மிகுந்த புன்னகையுடன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை