சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் ஆயத்தமாக, பக்காத்தான் ஹரப்பான் மற்றும் பாரிசான் நெசனல் தங்களுக்கான தொகுதிகளைப் பகிர்ந்து முடிவெடுத்து விட்டதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் மற்றும் பக்காத்தான் ஹரப்பானின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
ஏறக்குறைய 83 சதவிகிதம் முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன எனவும் இன்னும் 7 தொகுதிகளுக்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.








