கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமாவில் உள்ள ஒரு கோவிலில் நான்கு சிலைகள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் தாமிம் அப்துல் ரஸாக் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த இரண்டு போலீஸ் புகார்களின் அடிப்படையில், அக்டோபர் 10ஆம் தேதி காலை 11 மணியளவில் சிலாங்கூர், பெரானாங்கில் மூவரும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
விசாரணைக்காக மூவரும் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சேதத்தின் மொத்த மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை.
இந்த வழக்கு, மத உணர்வுகளை அவமதிக்கும் நோக்கில் வழிபாட்டுத் தலத்தைச் சேதப்படுத்துவது தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 295ஆவது பிரிவின்கீழ் விசாரிக்கப்படுகிறது. விசாரணை அறிக்கை அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.








