Oct 15, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டோம் –பிரதமர் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டோம் –பிரதமர் அன்வார்

இந்தோனேசியாவிலிருந்து பரவும் எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையைக் கையாள மலேசியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்டதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவிடம் மலேசியா மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், புகைமூட்டப் பிரச்சினையில் இந்தோனேசியாவுக்கு எதிராக மலேசியா இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதேவேளையில், தூதரக உறவுகள் வாயிலான பேச்சுவார்த்தைகளும் அவசியம் என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்தோனேசியாவில் காட்டுத் தீ மற்றும் நிலத் தீயால் ஏற்பட்ட புகைமூட்டம், அண்மைய வாரங்களில் மலேசியாவையும் சிங்கப்பூரையும் பாதித்துள்ளது. இதனால் சுவாசப் பிரச்சினைகள் அதிகரித்ததுடன், மலேசியாவின் சில பகுதிகளில் பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்த விவகாரம் அடுத்த மாதம் மணிலாவில் நடைபெறவுள்ள ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →