நாட்டில் காற்றுத் தரக் குறியீடு 100-ஐ தாண்டினால் பள்ளிகளின் வெளிப்புற நடவடிக்கைகள், இணைப்பாட நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 200-ஐ தாண்டினால் பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு மையங்களை மூடப் பரிந்துரைக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், கல்வி நிலையங்களை மூடுவது குறித்த இறுதி முடிவை கல்வி அமைச்சும் உயர்கல்வி அமைச்சுமே எடுக்கும். புகைமூட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, வெளிப்புற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளைக் குறைக்கவும், முடிந்தவரை கட்டடங்களுக்குள் இருக்கவும், வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.








