Oct 15, 2026
Thisaigal NewsYouTube

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த 33 வயது மருத்துவமனை நிர்வாகி ஒருவர், தமது வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சில நிமிடங்களுக்கு முன்பு அவரது கணக்கில் ஆயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான தொகையே இருந்தது.

பரிவர்த்தனை செய்யத் தயாரானபோது இந்தத் தொகையைக் கண்ட Wan Muhammad Fairus என்ற அந்த மருத்துவமனை நிர்வாகி, வங்கிச் செயலியிலிருந்து வெளியேறி மீண்டும் உள்நுழைந்தும் அதே தொகை காட்டப்பட்டதால் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர், வங்கியைத் தொடர்பு கொண்டபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு, தவறாகக் காட்டப்பட்ட தொகை வங்கியால் திருத்தப்பட்டது. அவரது உண்மையான வைப்புத் தொகை பாதிக்கப்படவில்லை. மேலும், இந்தச் சம்பவத்துக்காக வெகுமதி வழங்க வங்கி விரும்புவதாகத் தெரிவித்திருந்தாலும், இதுவரை தமக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை