Oct 15, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உடல்நலக் குறைவு காரணமாக கோலாலம்பூரில் உள்ள துவாங்கு முஹ்ரிஸ் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 457, 379ஆவது பிரிவுகளின் கீழ் இரண்டு குற்ற வழக்குகளும், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கும் விசாரிக்கப்பட்டு வந்தன. அவருக்கு 44 முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தடுப்புக் காவல் மரணமாக வகைப்படுத்தப்பட்டு, போலீஸ் நேர்மைக் கண்காணிப்புப் பிரிவின் கீழ் விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஊகங்களைத் தவிர்க்குமாறும் போலீஸ் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை