Oct 15, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

கோலாலம்பூரில் நாளை வெள்ளிக்கிழமை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று கோலாலம்பூர் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனினும், புகைமூட்டம் காரணமாக பள்ளிகளில் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புகைமூட்டத்தால் தங்கள் பிள்ளைகளின் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்று கவலைப்படும் பெற்றோர், அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கலாம். ஆனால், இது குறித்து பள்ளிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கல்வித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், புகைமூட்ட நிலவரம் தொடர்பான அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் ராஜனுக்கு பிரதமர் நிதியுதவி: விரைவில் குணமடைய அன்வார் பிரார்த்தனை