Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவில் ஒரு மணி நேரம் கார் துரத்தல்! போதைப்பொருளுடன் தம்பதி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவில் ஒரு மணி நேரம் கார் துரத்தல்! போதைப்பொருளுடன் தம்பதி கைது

மலாக்கா, தெங்கேராவில் போலீஸ் உத்தரவை பொருட்படுத்தாமல் ஆபத்தான முறையில் காரை ஓட்டிச் சென்ற தம்பதியினர், ஒரு மணி நேரத் துரத்தலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

39 வயது ஆடவரும் 32 வயது பெண்ணும் நேற்று மாலை 6.20 மணியளவில் சந்தேகத்திற்கிடமாகக் கார் ஓட்டியபோது போலீஸாரின் கவனத்துக்கு வந்தனர். காரை நிறுத்துமாறு உத்தரவிட்டும், ஓட்டுநர் வேகமாகச் சென்றதுடன், மலாக்காவின் பல முக்கிய சாலைகளில் எதிர்த்திசையிலும் காரை ஓட்டியுள்ளார்.

இறுதியில், கம்போங் சுங்கை பூதாட் பள்ளிவாசல் அருகே முட்டுச்சாலையில் காரைக் கைவிட்டுவிட்டு இருவரும் ஓடியுள்ளனர். அவர்களைப் போலீஸார் பிடித்தனர். காரிலிருந்து 0.22 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →