Oct 15, 2026
Thisaigal NewsYouTube

விடுதி கட்டடத்திலிருந்து விழுந்ததாகச் சந்தேகம்: 21 வயது பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விடுதி கட்டடத்திலிருந்து விழுந்ததாகச் சந்தேகம்: 21 வயது பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

பினாங்கு, கெளுகோரில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக விடுதியில், 21 வயது மாணவி ஒருவர் இன்று காலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

விடுதிக் கட்டடத்திலிருந்து அவர் விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. காலை 7.25 மணியளவில் துப்புரவுப் பணியாளர் ஒருவர், விடுதிக் கட்டடத்தின் கீழே கான்கிரீட் தரையில் மாணவி முதுகுப்புறமாகக் கிடப்பதைக் கண்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம், காலை 8.40 மணியளவில் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தது. முதற்கட்ட விசாரணையில், பிறர் தொடர்புடைய குற்றச்செயலுக்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், உயரத்திலிருந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக்கூடிய வெளிப்புறக் காயங்கள் மாணவியின் உடலில் காணப்பட்டன.

உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திடீர் மரணம் எனும் அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →