Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மைகாட் அட்டையை மாற்றிக் கொள்வதற்கு வார இறுதி நாட்களில் செயல்படுகிறது ஜேபிஎன்
தற்போதைய செய்திகள்

மைகாட் அட்டையை மாற்றிக் கொள்வதற்கு வார இறுதி நாட்களில் செயல்படுகிறது ஜேபிஎன்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.20-

கோலாலம்பூர் மாநகரில் உள்ள அனைத்து யுடிசி UTC மையங்களிலும் மக்கள் சேதமுற்ற தங்கள் மைகாட் அட்டையை மாற்றிக் கொள்வதற்கும், அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் தேசியப் பதிவு இலாகாவான ஜேபிஎன் தனது முகப்பிடங்களை வார இறுதி நாட்களில் திறந்துள்ளது.

மானியத்திற்குரிய பெட்ரோல் ரோன் 95 எரிபொருளை வாங்குவதற்கு மக்கள் தங்கள் மைகாட் அட்டையைப் பயன்படுத்தும் முறை விரைவில் அமல்படுத்தவிருக்கும் வேளையில் சேதமுற்ற தங்களின் மைகாட் அட்டையை மாற்றிக் கொள்ள அதிகமானோர் வார விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

வார நாட்களில் விடுமுறை கிடைக்காதவர்கள் அல்லது விடுமுறை எடுக்க வேண்டிய அவசியமில்லாத நிலையில் வார இறுதி நாட்களை மைகாட் அட்டையை மாற்றிக் கொள்ள சனி, ஞாயிற்றுக்கிழமைகளை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வருவது யுடிசி மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது.

அரசாங்க உதவிகளைப் பெறுவது, அரசாங்கச் சலுகைகளைப் பெறுவது, உதவித் திட்டங்களில் பங்கு கொள்வது, மருத்துவ சிகிச்சை, பண பட்டுவாடா, டோல் கட்டணம் முதலியவற்றுக்கு மென்பொருள் செயல்பாட்டில் உள்ள மைகாட் அட்டை மட்டுமே செல்லுப்படியாகும் என்பதால் அதிகமானோர் தங்கள் மைகாட் அட்டையை மாற்றிக் கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளனர்.

கோலாலம்பூர் மாநகரில் அனைத்து யுடிசி மையங்களிலும் தேசியப் பதிவு இலாகாவின் முகப்பிடங்கள் இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டுள்ளது.

Related News