Sep 27, 2026
Thisaigal NewsYouTube
காதலியை மடியில் வைத்து பேருந்து ஓட்டிய சம்பவம்: இருவருக்கும் 4 நாட்கள் நீதிமன்றக் காவல்
தற்போதைய செய்திகள்

காதலியை மடியில் வைத்து பேருந்து ஓட்டிய சம்பவம்: இருவருக்கும் 4 நாட்கள் நீதிமன்றக் காவல்

Share:

காதலியை மடியில் அமர வைத்து சொகுசு விரைவுப் பேருந்தை ஓட்டிய விவகாரத்தில், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கும், அவரது காதலிக்கும் ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4 நாட்கள் ரிமாண்ட் வழங்கியுள்ளது.

இந்த ரிமாண்ட் உத்தரவை நீதிபதி மசானா சினின், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அமல்படுத்த அனுமதி வழங்கினார்.

இச்சம்பவத்தில், 36 வயதுடைய பேருந்து ஓட்டுநரும், அவரது 21 வயதுடைய காதலியும் நேற்று போலீசாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு விற்பனையாளராகப் பணிபுரியும் அப்பெண், அந்த ஓட்டுநருடன் கடந்த ஐந்து மாதங்களாகப் பழகி வருவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவ்விருவரும் சுமார் இரண்டு மணி நேரங்கள் விசாரிக்கப்பட்டு, நேற்று காவலில் வைக்கப்பட்டதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ராபர்ட் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்