பத்து பஹாட், நவம்பர்.24-
லோரியின் சக்கரங்களை இயக்கும் அடிப்பாகத்தில் உள்ள 100 கிலோ எடைக் கொண்ட நீண்ட இரும்பு உருளையான Long Shaft கழன்று, எம்பிவி காரின் கண்ணாடியைத் துளைத்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக மாண்டார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் ஜோகூர், பத்து பஹாட், ஶ்ரீ காடிங், ஜாலான் ஶ்ரீ பெங்கால் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 63 வயது ஜுஹாரி முரிட் என்ற அந்த நபர், தனது மனைவி உட்பட நான்கு குடும்ப உறுப்பினர்களுடன் காரில் பயணித்துக் கொண்டு இருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்த இரும்பு உருளை காரின் கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு அந்த முதிவரின் முகத்தில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். இதில் அவரின் மனைவி மற்றும் இதர இருவர் காயமின்றி உயிர் தப்பினர்.








