மலாக்கா, ஆகஸ்ட்.13-
தனது தம்பியைக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலாக்கா, கண்டாங், தாமான் கண்டாங் பெர்மாயில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 39 வயதுடைய நபரை, வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
இன்று அதிகாலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் கடும் காயங்களுக்கு ஆளாகிய 35 வயதுடைய நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கத்திக் குத்தில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.








