Sep 26, 2026
Thisaigal NewsYouTube
வருமான வரித் தாக்கல்: மே 15 வரை காலக்கெடு நீட்டிப்பு - எல்.எச்.டி.என் (LHDN) அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

வருமான வரித் தாக்கல்: மே 15 வரை காலக்கெடு நீட்டிப்பு - எல்.எச்.டி.என் (LHDN) அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, ஏப்ரல்.29-

நாட்டின் 2025-ஆம் ஆண்டுக்கான வருமான வரி மதிப்பீட்டு ஆண்டிற்கான தனிநபர் வருமான வரிப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொழில் சாரா வருமானம் ஈட்டும் தனிநபர்கள் தங்கள் வரிப் படிவங்களை e-Filing எனப்படும் மின்-தாக்கல் வழியாகச் சமர்ப்பிக்க கூடுதல் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக உள்நாட்டு வருமான வரி வாரியமான LHDN அறிவித்துள்ளது.

முன்னதாக நாளை ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த இந்த அவகாசம், தற்போது வரி செலுத்துவோர் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்கவும், அபராதங்களைத் தவிர்க்கவும் தகுதியுள்ள பொதுமக்கள் இந்த நீட்டிக்கப்பட்ட காலத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே வரி தாக்கல் செய்யுமாறு எல்.எச்.டி.என் (LHDN) அறிவுறுத்தியுள்ளது.

Related News

வருமான வரி தாக்கல்: மே 15 வரை காலக்கெடு நீட்டிப்பு - எல்.... | Thisaigal News