Jul 31, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் சோதனையில் தப்பித்த நபர் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

போலீஸ் சோதனையில் தப்பித்த நபர் பிடிபட்டார்

Share:

கடந்த சனிக்கிழமை பெர்லிஸ், அராவ் – வில் போலீஸ் சோதனையின் போது தனது ப்ரோத்தான் சத்ரியா காரை வைவிட்டு, தப்பிச் சென்ற சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைவிடப்பட்ட காரில் சுமார் 25 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருளை போலீசார் மீட்டதைத் தொடர்ந்து அந்த நபர், தீவிரமாக தேடப்பட்டு வந்ததாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் மொஹ்சின் முஹமாட் ரொடி தெரிவித்தார்.

42 வயதுடைய அந்த நபர் அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் ஜித்ராவிற்கு அருகில் கம்போங் பாடாங் லாமாவில் கைது செய்யப்பட்டதாக அஹ்மாட் மொஹ்சின் குறிப்பிட்டார்.

Related News