Sep 30, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய நடிகை ஜெடாவை விட்டு வெளியேறி விட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய நடிகை ஜெடாவை விட்டு வெளியேறி விட்டார்

கோலாலம்பூர், ஜனவரி.17-

காணாமல் போனதாகக் கூறப்படும் மலேசிய திரைப்பட மற்றும் நாடக நடிகை நடியா கெசுமா, சவுதி அரேபியா, ஜெடா, கிங் அப்துல் அஸிஸ் அனைத்துலக விமான நிலையம் வழியாக வெளியேறியுள்ளதை குடிவரவுத் துறை ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாக மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மலேசியத் தூதரகம் சவுதி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், அந்த நடிகையின் நடமாட்டம் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அந்த மலேசிய எங்கு சென்றார் அல்லது தற்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்த மேல் விவரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், அந்த நடிகை சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறி விட்டார் என்பது அதிகாரப்பூர்வ பயண ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது என்று அமைச்சர் முகமட் ஹசான் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →