மலாக்கா, ஜனவரி.08-
மலாக்கா, மலாக்கா ராயாவில் இன்று அதிகாலையில் ஒரு Karaoke மற்றும் உணவக கேளிக்கை மையத்தில் கும்பல் ஒன்று கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் போலீசார் ஆறு பேரைக் கைது செய்துள்ளனர்.
அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் துப்பாக்கி வேட்டு கிளப்பப்பட்டது தொடர்பில் போலீசார் புகார் ஒன்றைப் பெற்றுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டஃபர் பாதிட் தெரிவித்தார்.
அந்த கேளிக்கை மையத்தில் நான்கு நபர்கள் சினமூட்டும் செயலில் ஈடுபட்டு வந்ததன் விளைவாகவே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட கும்பலிடமிருந்து போலீசார் ஒரு செயற்கைத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.








