கோலாலம்பூர், ஜனவரி.28-
மலேசிய ரிங்கிட், அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று புதன்கிழமை மதிய இடைவேளையின் போது 3 ரிங்கிட் 91 சென் என்ற நிலைக்கு வலுவடைந்தது. சந்தையில் ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையின் காரணமாக, கடந்த சில அமர்வுகளாகத் தொடர்ந்து வரும் இந்த உயர்வு இன்றும் நீடித்தது. கடைசியாக 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி காணப்பட்ட இந்த வலுவான நிலை, தற்போது ரிங்கிட் பெற்று வரும் வேகத்தைக் காட்டுகிறது.
ரிங்கிட்டின் புதிய ஆதரவு நிலை 3 ரிங்கிட் 87 சென்னாக இருக்கும் என்று இதற்கு முன்பு, பொருளாதார நிபுணர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் நிதி சீர்திருத்தங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் கொள்கை மறுசீரமைப்பு போன்றவை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன. இதன் விளைவாகவே ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.








