பத்து பஹாட், ஜனவரி.28-
பத்து பஹாட் பொழுதுபோக்கு மையத்தில் தனது மனைவியைத் தொந்தரவு செய்த நபரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 41 வயது சிங்கப்பூர் பிரஜையான Seah Yan Sheng Romeo என்பவருக்கு பத்து பகாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 1,800 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.
அந்த சிங்கப்பூர் பிரஜை, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் பத்து பஹாட், தாமான் செத்தியா ஜெயாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் இந்த மோதல் நடந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 33 வயது நபர் தனது மனைவியைத் தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த ரோமியோ, அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நபர் குற்றத்தை ஒப்பியதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அருண் நோவல் டாஸ் இந்த அபராதத்தை விதித்தார்.








