Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

90, 000 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பட்டாசுகளும் மத்தாப்புகளும் பறிமுதல்

Share:

கோல நெருஸ், மார்ச்.08-

திரங்கானு, கோல நெருஸ், தாமான் பெஸ்தாரியில் வீடொன்றில் 90 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் வைத்திருந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோலத் திரங்கானு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு வீரர்கள் நடத்திய சோதனையில் 247 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் மத்தாப்புகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 35 வயது ஆடவர் தாம் பட்டாசு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டார். எனினும் அதற்கான லைசன்ஸ் பெற்றதில்லை என்றும் போலீசிடம் விண்ணப்பித்ததில்லை என்றும் கூறியதாக கோலத் திரங்கானு மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார். அவ்வாடவருக்கு போதைப் பொருள் சம்பந்தப்பட்ட கடும் குற்றப் பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து