பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.17-
பொது விரிவுரை ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியதற்காகக் கைது செய்யப்பட்ட முன்னாள் பத்திரிகையாளர் ரெக்ஸ் டான் (Rex Tan), இன்று பிற்பகல் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
31 வயதான ரெக்ஸ் டான் மீது தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் விடுவிக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் அரசியல்வாதி ஜார்ஜ் காலோவே (George Galloway) பங்கேற்ற காசா குறித்த விரிவுரையில், ரெக்ஸ் டான் எழுப்பிய கேள்வி இன ரீதியான உள்நோக்கம் கொண்டதாகக் கூறப்பட்டதால் சர்ச்சை உருவானது. இது தொடர்பாக அவருக்கு எதிராக மூன்று போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.








