பிரதமர் அன்வார் திட்டவட்டம்
அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பு தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மின் விசாரணைக்கு ஆளாகியுள்ள மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார், விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சிவக்குமார் சம்பந்தப்பட்ட விவகாரம், இன்னுமும் விசாரணைக் கட்டத்தில் உள்ளது. அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இந்நிலையில் முன்கூட்டியே அவரை விடுப்பில் செல்ல வேண்டுமென்று கோருவது முறையல்ல என்று பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
சிவக்குமாரை எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைத்ததற்காக அவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்று பொருட்படாது. மாறாக, சில கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். மினால் அவர் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று பிரதமர் விளக்கினார்.
அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நிறுவனம் சம்பந்தப்பட்ட 9 கோடியே 70 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பில் சிவக்குமாரின் இரு அதிகாரிகள் எஸ்.பி.ஆர்.எம். மினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிவக்குமார் நேற்று எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.








