Jan 19, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் இலவச சட்ட ஆலோசனை
தற்போதைய செய்திகள்

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் இலவச சட்ட ஆலோசனை

Share:

ஷா ஆலாம், ஜனவரி.19-

கோத்தா கெமுனிங் (Kota Kemuning) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், தனது தொகுதி மக்களுக்காக இலவச சட்ட உதவி வழங்கும் சேவையைத் தொடங்கியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இச்சேவை வழங்கப்படும்.

இந்தச் சட்ட ஆலோசனையைப் பெற விரும்புவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

• கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இந்தச் சேவை வழங்கப்படும்.

• தொடர்புக்கு:

o தொலைபேசி எண்: 03-5131 4354.

o மின்னஞ்சல்: [email protected].

o நேரடித் தொடர்பு: 011-1257 5460 அல்லது 010-211 8016 திருமதி யோகேஸ்.

நீதிமன்றம் அல்லது சட்ட ரீதியான சிக்கல்களால் அவதிப்படும் தொகுதி மக்கள், குறிப்பாக B40 பிரிவைச் சேர்ந்த மக்கள் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற இச்சேவை ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்துள்ளார்.

Related News