இரண்டு குழந்தைகளை சித்ரவதை செய்ததாக நம்பப்படும் 21 வயதுடைய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்கூடாய், முதியாரா ரினியில் உள்ள குழந்தைகள் பாராமரிப்பு இல்லத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில், இன்று அதிகாலை 2 மணியளவில் ஸ்கூடாய், பண்டர் செலேசா ஜெயா பகுதியில் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டதாகவும், இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை 4 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதாகவும் ஜொகூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஸமான் மமாட் தெரிவித்தார்.
மேலும், 11 மாத பெண் குழந்தையும் ஒன்பது மாத ஆண் குழந்தையும் இந்த சித்ரவதைக்கு இலக்கானதாக கமருல் ஸமான் குறிப்பிட்டார்.








