மலாக்கா, டிசம்பர்.19-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக 55 வயது பி. ஸ்டீவன் ஞாமமுத்த்பு என்பவருக்கு மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இரண்டு பிரம்படிகள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி பிற்பல் 2.40 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்டம், பத்து பெரெண்டாமில் உள்ள ஒரு பேரங்காடிக்கு அருகில் ஜாலான் சுதெரா பெலியாவில் அந்த லோரி ஓட்டுநர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டீவன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி ரொஹாத்துல் அக்மார் அப்துல்லா இந்தத் தண்டனையை விதித்தார்.
சிறுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலைக் கருத்தில் கொண்டும், பொது நலன் கருதியும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை ஏற்று நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்குகிறது என்று நீதிபதி ரொஹாத்துல் தெரிவித்தார்.








