Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி
தற்போதைய செய்திகள்

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

Share:

பேராக் மாநிலம், தெலுக் இந்தானில் உள்ள ஜாலான் படாங் டெம்பாக் சாலையில், போதையில் கார் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் ஓட்டுநரால் ஏற்பட்ட விபத்தில், இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்ததுடன், சிறுவன் ஒருவன் காயமடைந்தான்.

இது குறித்து ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் சுவா கோக் லியான் வெளியிட்ட அறிக்கையில், இந்த விபத்தானது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6.35 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் இரண்டு இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காயமடைந்த சிறுவனும், 28 வயது கார் ஓட்டுநரும், தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News